இந்தியா விளையாட்டு

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா மருத்துவமனையில் அனுமதி.! என்னாச்சு அவருக்கு.?

Summary:

டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் தங்கப

டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்றார். இதையடுத்து இந்தியா திரும்பிய அவரை அரசியல் தலைவர்கள் பலரும் அவரை நேரில் சந்தித்தும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் பாராட்டு தெரிவித்தனர். 

இந்தநிலையில், டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்று நாடு திரும்பிய நீரஜ் சோப்ராவுக்கு கடந்த சில நாட்களாகவே உடல்நலக் குறைபாடு இருந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டதில் நெகடிவ் என்று ரிசல்ட் வந்துள்ளது. அதன் பின்னர் டெல்லி செங்கோட்டையில் 75-வது சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்றார். 

இந்த நிலையில் நேற்று அரியானா மாநிலம் பானிபட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது, நீரஜ் சோப்ராவிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே அவர் வெளியேறினார். தற்போது அதே ஊரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நீரஜ் சோப்ராவுக்கு, கடுமையான காய்ச்சல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


 


Advertisement