தமிழகம் விளையாட்டு

முதல் முறையாக வெளியான புகைப்படம்.. குட்டி மகள் மற்றும் மனைவியுடன் தமிழக வீரர் நடராஜன்.. வைரலாகும் புகைப்படம்..

Summary:

தனது மனைவி மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் தனது

தனது மனைவி மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ஐபில் போட்டி மூலம் பிரபலமான தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய தொடரில், வலைப்பயிற்சி பந்து வீச்சாளராக பங்கேற்று, பின்னர் தனது திறமைமூலம் மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் கலந்துகொண்டார் நடராஜன்.

தனக்கு கிடைத்த வாய்ப்புகளை மிக சரியாக பயன்படுத்தி, தனது திறமையால் இந்திய அணியில் முத்திரையையும் பதித்துள்ளார். இந்நிலையில் அடுத்ததாக இங்கிலாந்து அணியுடன் T20 போட்டியில் விளையாட இருக்கும் இந்திய அணியில் தேர்வாகியுள்ளார் நடராஜன்.

முன்னதாக ஐபில் போட்டி முடிந்தகையோடு நடராஜன் ஆஸ்திரேலியா சென்றுவிட்டதால், அவர் தனக்கு புதிதாக பிறந்த குழந்தையை ஒருமுறை கூட பார்க்கமுடியவில்லை. பின்னர் நீண்ட நாட்கள் நடைபெற்ற ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு தான் அவர் மகளைக் காண சொந்த ஊர் திரும்பி வந்தார்.

இந்நிலையில் தனது மனைவி மற்றும் அவர்களது குட்டி குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை நடராஜன் முதல் முறையாக தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். குழந்தைக்கு ஹன்விகா என பெயர் சூட்டியுள்ள நிலையில், எங்களின் குட்டி தேவதை ஹன்விகா என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார் நடராஜன். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.Advertisement