இந்தியா விளையாட்டு

பிசிசிஐ யே சொல்லிடுச்சு.. தமிழக வீரர் நடராஜனுக்கு கிடைத்த மேலும் ஒரு அங்கீகாரம்.. கெத்துக்காட்டும் தமிழன்

Summary:

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் டெஸ்ட் தொடரில் உமேஷ் யாதவுக்குப் பதிலாக தமிழக வீரர் நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் டெஸ்ட் தொடரில் உமேஷ் யாதவுக்குப் பதிலாக தமிழக வீரர் நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார்.

T20 , ஒருநாள் போட்டி, டெஸ்ட் தொடர் ஆகிய போட்டிகளில் விளையாடுவதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றுள்ளது. முன்னதாக நடந்த ஒருநாள் போட்டியை ஆஸ்திரேலியா வென்றநிலையில், T20 தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இதனை அடுத்து இரண்டு அணிகளும் தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது.

இரடாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றதை அடுத்து டெஸ்ட் தொடரில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் மெல்போர்னில் நடந்த டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ்விற்கு காயம் ஏற்பட்டு டெஸ்ட் தொடரிலிருந்து விடுவிக்கப்பட்டு நாடு திரும்புகிறாா்.

உமேஷ் யாதவ் இந்திய அணியில் விளையாடாததை அடுத்து அவருக்கு பதிலாகத் தமிழக வீரர் நடராஜன் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக தற்போது பிசிசிஐ அறிவித்துள்ளது. ஏற்கனவே T20 போட்டியில் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியை வெற்றிபெற செய்தார் நடராஜன். இதனால் தற்போது டெஸ்ட் போட்டியிலும் இவர்மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.


Advertisement--!>