தோனியின் ஹெலிகாப்டர் ஷாட் தெரியும். ஆனா இது என்ன புது ஷாட்..! வைரலாகும் வீடியோ!

தோனியின் ஹெலிகாப்டர் ஷாட் தெரியும். ஆனா இது என்ன புது ஷாட்..! வைரலாகும் வீடியோ!


mysteries-cricket-shot-video-goes-viral

கிரிக்கெட்டில் பவுண்டரி, சிக்ஸ் என கேள்விப்பட்டு போர் அடித்த நிலையில் ஹெலிகாப்டர் சிக்ஸ் என்ற ஒன்றை அறிமுகம் செய்து கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியவர் தல தோனி. கடைசி நேரத்தில், இக்கட்டான நிலையில் கூட ஹெலிகாப்டர் ஷாட் மூலம் அணியை வெற்றிபெற செய்வார் தோனி. தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டுக்காகவே ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

தோனியின் இந்த ஹெலிகாப்டர் ஷாட்டை தவிர வேறு எதுவும் பெரிதாக பேசப்படவில்லை. இந்நிலையில், கிரிக்கெட் வீரர் ஒருவர் இரண்டு கால்களையும் தூக்கி வித்தியாசமாக அடுத்துள்ள புது ஷாட் ஓன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

Mysteries

உள்ளூர் மைதானம் ஒன்றில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில், வீரர் ஒருவர், பந்து வரும்போது கால்களை தூக்கி பந்தை பின்னால் அடித்து தெறிக்க விடுகிறார். பார்ப்பதற்கு புதுசாகவும், வித்தியாசமாகவும் இருக்கும் இந்த ஷாட் இணையத்தில் தற்போது வைரலாகிவருகிறது.