என்னடா நடக்குது அங்க!! கிரிக்கெட் போட்டியின் நடுவே வீரர்கள் செய்த காரியம்!! வைரலாகும் வீடியோ..

கிரிக்கெட் போட்டியின் போது இரண்டு அணி வீரர்கள் மைதானத்தில் முறைத்துக்கொண்ட வீடியோ ஒன்று இண


Muzarabani and Taskin get into each other's faces viral video

கிரிக்கெட் போட்டியின் போது இரண்டு அணி வீரர்கள் மைதானத்தில் முறைத்துக்கொண்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 1 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் டெஸ்ட் போட்டி தொடங்கியுள்ளது. அதில் வங்கதேச அணி டாஸ் வென்று முதல் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.

cricket

வங்கதேச அணி வீரர்கள் அனைவரும் சிறப்பாக விளையாடிய நிலையில், வங்கதேச அணி 468 ரன்களை குவித்தது. இந்நிலையில் போட்டியின் 85 வது ஓவரை ஜிம்பாப்வே அணி வீரர் முசரபானி வீசினார். அந்த ஓவரின் நான்காவது பந்தை வங்கதேச வீரர் டாஸ்கிங் அகமது எதிர்கொண்டார்.

முசரபானி வீசிய பந்தை டாஸ்கிங் அடிக்காமல் விட்டுவிட்டு நடனம் ஆடுவதுபோல் செய்கை செய்தார். இதனை பார்த்த முசரபானி, டாஸ்கிங் அருகே சென்று முறைத்துப்பார்த்தார். பின்னர் இருவரும் அருகருகே நின்று முறைத்துப்பார்த்துக்கொண்டே இருந்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது.