தூக்கி எறியப்பட்ட முரளி விஜய், அஸ்வின் - தமிழக அணியில் அதிரடி மாற்றம்

தூக்கி எறியப்பட்ட முரளி விஜய், அஸ்வின் - தமிழக அணியில் அதிரடி மாற்றம்



murali-vijay-and-dinesh-kartick-not-in-tamilnadu-squad

சென்னையில் செப்டம்பர் 19 முதல் 2018 ஆம் ஆண்டிற்கான விஜய் ஹசாரே டிராபிக்கான தொடர் தொடங்கவுள்ளது. இதில் நடைபெறும் எலைட் குரூப் ‘சி’ லீக் போட்டிகளில் தமிழ்நாடு அணிக்கு விஜய் ஷங்கர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அனுபவம் வாய்ந்த மாற்றும் இந்திய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்களான தினேஷ் கார்த்திக் மற்றும் முரளி விஜய் ஆகியோர் இம்முறை அணியில் இடம்பெறவில்லை.

vijay hazare

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தேர்வு குழு செவ்வாயன்று விஜய் ஹசாரே கோப்பைக்கு செல்லும் தமிழக அணியை அறிவித்தது.

செப்டெம்பர் 15 முதல் ஆசியா கோப்பை தொடங்கவுள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் இடம்பெற்றுள்ளதால், தமிழக அணிக்கு அவரால் ஆட இயலாது. 

vijay hazare

முரளி விஜய், தற்போது இங்கிலாந்தின் கவுண்டி கிளப் அணியான எசெக்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். தமிழகத்தை சேர்ந்த இந்தியாவின் சுழல் பந்துவீச்சாளர் அஸ்வினும் அணியில் இடம்பெறவில்லை.

VAP டிராபியில் சிறப்பாக தனது திறமையை வெளிப்படுத்திய வேகப்பந்து வீச்சாளர் ஷரன் குமார் தமிழக அணியில் அறிமுகமாகவுள்ளார். அவரது வியத்தகு செயல்திறனுக்காக அவருக்கு தற்போது வெகுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அபினவ் முகுந்த் சில வருடங்களாக எதிர்பார்த்த அளவிற்கு செயல்படவில்லை என்றாலும், மீண்டும் அவருக்கு அணியில் இடமளிக்கப்பட்டுள்ளது வியப்பாக உள்ளது. 

vijay hazare

செப்டம்பர் 20 ம் தேதி குஜராத்திற்கு எதிராக இந்த தொடரின் முதல் போட்டியை ஆடுகிறது தமிழக அணி.

விஜய் ஹசாரே கோப்பைக்கான தமிழக அணி:

விஜய் ஷங்கர் (கேப்டன்), அபினவ் முகுந்த், பாபா இண்டிரஜித், பாபா அபராஜித், எம். கௌஷிக் காந்தி, பி. அனிருத், என்.ஜகதேசன் (விக்கெட் கீப்பர்), ஷாருக் கான், ராகில் ஷா, சாய் கிஷோர், சி.வி. வருண், எம். முகம்மது, கே விக்னேஷ், டி நடராஜன் , ஷரன் குமார்.