விளையாட்டு

கொல்கத்தா மோசமான தோல்வி! 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றி!

Summary:

மும்பை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் மும்பை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது.

மும்பை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் மும்பை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது.

ஐபில் 13 வது சீசன் 32 வது போட்டியில் மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் மட்டுமே அடித்தது. கொல்கத்தா அணி சார்பாக கம்மின்ஸ் 36 பந்துகளில் 53 ரன்களும், அணியின் புது கேப்டன் 29 பந்துகளில் 39 ரன்களும் அடித்தனர்.

பேட்டிங்கில் கவனம் செலுத்தப்போவதாக கேப்டன் பதிவியில் இருந்து விலகிய தினேஷ் கார்த்திக் 8 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டம் இழந்தார். இதனை அடுத்து 149 என்ற எளிமையான இல்லக்குடன் களமிறங்கிய மும்பை அணி வீரர்கள் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக ஆடி ரன் குவித்தனர்.

மும்பை அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா 36 பந்துகளில் 35 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். மறுபக்கம் அதிரடியாக விளையாடிய டீ காக் 44 பந்துகளில் 78 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காதநிலையில், மும்பை அணி 16.5 ஓவர்களில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது.


Advertisement