யாரு உள்ளே வரணும்னு நாங்க தான் தீர்மானிப்போம்.! கெத்து காட்டும் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள்.!

யாரு உள்ளே வரணும்னு நாங்க தான் தீர்மானிப்போம்.! கெத்து காட்டும் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள்.!


mumbai-indians-fans-talk-about-today-match

2020 ஐபிஎல் டி20 தொடரின் கடைசி லீக் போட்டி இன்று நடைபெறுகிறது. இன்று நடைபெறும் ஆட்டம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் வாழ்வா? சாவா? ஆட்டமாகவே இருக்கும் என கருதப்படுகிறது. புள்ளிபட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் பிலே ஆப் சுற்றுக்கு முன்னேறும். 

இந்தநிலையில் புள்ளிபட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் மும்பை அணியும், இரண்டாமிடத்தில் இருக்கும் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் மூன்றாம் இடத்தில் இருக்கும் ஆர்சிபி அணிகள் பிலே ஆப் சுற்றுக்கு முன்னேறிவிட்டன. தற்போது 14 போட்டிகளில் ஆடி 7 போட்டிகளில் வெற்றிபெற்று 14 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது கொல்கத்தா அணி.

kkr

ஆனால் 13 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளில் வெற்றிபெற்று 12 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. எனவே சன்ரைஸர்ஸ் அணி இன்றைய போட்டியில் வென்றால் 14 புள்ளிகள் பெறும். ஆனால் சன்ரைஸர்ஸ் அணியின் நெட் ரன்ரேட் கொல்கத்தா அணியை விட அதிகமாக உள்ளது. 

எனவே இந்த போட்டியில் சன்ரைஸர்ஸ் வென்றால் அந்த அணி நான்காவது அணியாக பிலே ஆப் சுற்றுக்கு முன்னேறும், மும்பை அணி வெற்றிபெற்றால் கொல்கத்தா அணி முன்னேறும். இந்தநிலையில் பிலே ஆப் சுற்றுக்கு நான்காவது அணியாக யார் வரவேண்டும் என்பதை நாங்கள் தான் முடிவு செய்யவேண்டும் என மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.