அந்த ஓவரில் ஏன் சிங்கிள் அடிக்கவில்லை?? தோனி கொடுத்த விளக்கம்!

அந்த ஓவரில் ஏன் சிங்கிள் அடிக்கவில்லை?? தோனி கொடுத்த விளக்கம்!



ms-dhoni-talk-about-last-match


ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறு விறுப்பாக நடந்துவருகிறது. 39 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 போட்டிகளில் 7 போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணி இரண்டாவது இடத்தில் உள்ளது.

நேற்று நடந்த 39 வது போட்டியில் பெங்களூர் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதியது. முதலில் பேட் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன் எடுத்துது. 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் துவக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

ஆட்டத்தின் இறுதி ஓவரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற 26 ரன்கள் தேவை என்ற நிலையில் தோனி 3 சிக்ஸ், 1 பவுண்டரி மற்றும் 2 ரன்கள் என 5 பந்தில் 24 ரன்கள் குவித்தார். கடைசியில் ஒரு பந்துக்கு இரண்டு ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கடைசி பந்தினை தோனியால் தொட முடியாமல், கீப்பரிடம் செல்வதற்குள் ஒரு ஓட்டம் எடுக்க முயற்சித்தபோது தாகூர் ரன் அவுட் ஆனார்.

MS Dhoni

இறுதியில் சென்னை அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 160 ஓட்டங்கள் எடுத்து தோல்வியடைந்தது. அந்த அணியில் கடைசி வரை போராடிய டோனி 48 பந்துகளில் 7 சிக்சர், 5 பவுண்டரிகளுடன் 84 ரன்கள் எடுத்தார்.

இந்நிலையில் 19-வது ஓவரில் சிங்கிள் எடுக்காததற்கு தோனி விளக்கமளித்துள்ளார். அவர் கூறுகையில், பந்துவீச்சாளர்கள் கடினமான முறையில் பந்துவீசி வந்தனர். அதுமட்டுமில்லாமல் ஆடுகளம் புதிதாக களமிறங்கியவர்களுக்கு அதிக சவாலாக அமையும் என கருதியதால், சிங்கிள் வேண்டாம் என நினைத்தேன் எனத் தெரிவித்துள்ளார்.