தனக்காக காத்திருந்த ரசிகருக்கு தல தோனி கொடுத்த இன்ப அதிர்ச்சி! வைரலாகும் வீடியோ!

தனக்காக காத்திருந்த ரசிகருக்கு தல தோனி கொடுத்த இன்ப அதிர்ச்சி! வைரலாகும் வீடியோ!



ms-dhoni-surpriced-fan


இந்தியாவில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான ஏலம் சமீபத்தில் கொல்கத்தாவில் நடைபெற்றது. சர்வதேச போட்டிகளில் விளையாடாமல் இருக்கும் தோனி, ஐபிஎல்லில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்தபோது, தோனி இருக்கும் வரை அவர் தான் சென்னை அணியின் தலைவர் என்று அந்த நிர்வாகமே தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தற்போது சமூகவலைத்தளங்களில் தோனியின் பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் ஒரு போட்டி முடிந்து சென்னை அணி வீரர்கள் பேருந்தில் ஏறிக் கொண்டிருக்கும் போது, அங்கிருந்த ரசிகர்கள் தோனியை கண்டவுடன் அவரின் பெயரை சொல்லி கத்தினர்.


அப்போது பெண் ரசிகை ஒருவர் அவர் வரைந்த புகைப்படத்தை காண்பித்த படி நின்றுகொண்டிருந்தார். இதனைப்பார்த்த தோனி உடனடியாக அங்கிருந்தவரிடம் அந்த புகைப்படத்தை வாங்கி வரும் படி கூறி, அதில் தன்னுடைய ஆட்டோகிராப்பை போட்டு கொடுத்தார். இதை வாங்கிய அந்த பெண் ரசிகை வியப்பில் ஆழ்ந்து போனார்.