இந்தியா விளையாட்டு

தொடர்ந்து 5 சிக்சர்கள் அடித்து ரசிகர்களை மிரள வைத்த தல தோனி! சிஎஸ்கே வேட்டைபுலியின் வைரல் வீடியோ!

Summary:

ms Dhoni sixer video


சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வலை பயிற்சியின்போது தொடர்ந்து 5 சிக்சர்கள் அடித்து ரசிகர்களை மிரள வைத்துள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 29-ஆம் தேதி மும்பையில் தொடங்குகிறது. இதற்கானப் பயிற்சியை சென்னை சூப்பர் கிங்ஸ் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கடந்த உலகக்கோப்பைக்குப் பிறகு தோனி கிரிக்கெட் பக்கம் தலை காட்டாததால், அவருடைய வருகை ரசிகர்களுக்கு பல எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.

இந்நிலையில் நேற்று சிஎஸ்க்கே கேப்டன் தோனி வலை பயிற்சியில் ஈடுபட்டார். அவரை பார்த்த ரசிகர்கள் தோனி, தோனி என்று ஆரவாரம் செய்தனர். தோனிக்காகவே ஏராளமான ரசிகர்கள் பயிற்சி ஆட்டத்தினை பார்க்க வந்தனர்.

 பயிற்சியில் ஈடுபட்டு வரும் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி வலை பயிற்சியின்போது தொடர்ந்து 5 பந்துகளில் சிக்சர் அடித்து மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்களை மிரள வைத்தார்.  தோனி தொடர்ச்சியாக சிக்சர்கள் அடித்த விடியோவை பிரபல ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


Advertisement