பாத்ரூமில் அமர்ந்து பாட்டு பாடும் தோனி.! இணையத்தில் வைரலாகும் வீடியோ…!

MS Dhoni singing song in Bathroom video goes viral


ms-dhoni-singing-song-in-bathroom-video-goes-viral

கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரையிறுதி ஆட்டத்தில்  இந்திய அணி நியூஸிலாந்து அணியிடம் தோற்றுப்போன பிறகு அந்த போட்டியில் விளையாடிய இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி வேறு எந்த போட்டிகளிலும் இதுவரை கலந்துக்கொள்ளவில்லை.

dhoni

தோனி இனி சர்வதேச போட்டிகளில் விளையாடுவாரா என்பதே சந்தேகமாக உள்ள நிலையில், அடுத்த மாதம் தொடங்க இருக்கும் ஐபில் போட்டிகள் தோனி ரசிகர்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது. ஐபில் போட்டிகளில் விளையிடுவதற்காக தோனி மார்ச் மாதம் முதல் தேதியிலிருந்து பயிற்சியில் கலந்துக்கொள்வார் என்ற செய்தி சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்களான பார்திவ் படேல் மற்றும் பியூஷ் சாவ்லாவுடன் இணைந்து பாத் ரூமில் அமர்ந்து அனைவரும் பாடல் பாடும் வீடியோ ஓன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது.