விளையாட்டு

பானிப்பூரி விற்பனை செய்யும் தோனி..! இணையத்தில் வைரலாகும் வீடியோ...!

Summary:

MS Dhoni selling Pani puri video goes viral on Twitter

கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு தோனியை இந்திய அணியில் காணமுடியவில்லை. நியூசிலாந்து அணியுடனான தோல்விக்கு பிறகு இந்திய ஆர்மியில் பணியாற்ற சென்ற தோனி இரண்டு மாதங்கள் இந்திய ஆர்மியுடன் இணைந்து செயல்பட்டார்.

ஆர்மியில் இருந்து திரும்பிய பிறகாவது தோனி அணியில் விளையாடுவர் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், எந்த ஒரு தொடரிலும் தோனி விளையாடவில்லை. இது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. என்னதான் இந்திய அணி சிறப்பாக விளையாடிவந்தாலும் தோனி... தோனி... என்ற குரல்களும், மிஸ் யூ தோனி என்ற பேனர்களும் மைதானத்தில் தட்டுப்படத்தான் செய்கின்றன.

இந்நிலையில் தனது குடும்பத்துடன் மால தீவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தோனி அங்கிருக்கும் கடற்கரையில் வாலிபால் விளையாடும் வீடியோ சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி வைரலானது. தற்போது தோனி பாணி பூரி தயார் செய்து ஆர்.பி.சிங், சாவ்லாவுக்கு பரிமாறும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.

இந்த வீடியோ ரீட்விட் செய்து கொண்டாடி வரும் தோனி ரசிகர்கள், ஐபிஎல் ஆடுகளத்தில் உங்களை காண ஆர்வமாக உள்ளோம் என்ற கருத்துக்களையும் தெரிவித்துவருகின்றனர்.


Advertisement