இந்தியா விளையாட்டு

எத்தனை பேருக்கு தோனி ஞாபகம் வந்தது? கடைசி 2 சூப்பர் ஓவர்லயும்! தல தோனியை புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்!

Summary:

Ms dhoni fans talk about last two supper over

நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 டி20 போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி  3வது டி20  போட்டியின் சூப்பர் ஓவரில் நியூசிலாந்து அணி 17 ஓட்டங்களை பெற்றது. 18 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய போது, ரோகித்சர்மா கடைசி 2 பந்துகளுக்கு 10 ஓட்டங்கள் தேவை என்ற போது, அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள் விளாசி வெற்றி பெற்றது.. 

நியூசிலாந்து - இந்தியா இடையே நடைபெற்ற நேற்றைய 4 வது T20 போட்டியிலும் இந்திய அணி சூப்பர் ஓவர் முறையில் வெற்றிபெற்று அசதியுள்ளது. இரண்டு ஆட்டத்தின் வெற்றியிலும் ரசிகர்களுக்கு தோனியின் ஞாபகம் வருகிறது என கூறுகின்றனர்.

விராட் கோலி நேற்றைய  ஆட்டத்தின் சூப்பர்ஒவரில்  30 yard circle-க்குள் பந்தை அடித்துவிட்டு 2 ரன் ஒடும்போது தோனி இந்த வித்தையை வருங்கால வீரர்களுக்கு  விதைத்துவிட்டு தான் சென்றுள்ளார் என ரசிகர்கள் கருதுகின்றனர்.

அதேபோல 3வது போட்டியின் கடைசி ஓவரின் கடைசி பந்தில் ஷமி போல்டு ஆக்குறத்துக்கு முன்னால்,  ராகுல் தோனி மாதிரியே  ஒரு கை கிளவுஸை கலட்டிட்டு தான் நின்றுகொண்டிருப்பார். அதேபோல் விராட் கோலி, கடைசி  2 போட்டியிலும் பல நேரங்களில் டென்ஷன் ஆகாமல் தோனி எவ்வாறு அமைதியாக இருப்பாரோ, அதேபோல் தான் இருந்தார். இந்த அனைத்து தருணங்களிலும் ரசிகர்களின் மனதில் வந்தது தோனியின் ஞாபகம் தான்.

இதுகுறித்து ரசிகர்கள் கூறுகையில், தோனி எங்கயும் போகவில்லை,  இங்கயே தான் இருக்கிறார். ஒரு பேட்ஸ்மேனை பாத்து இன்ஸ்பயர் ஆகி அவர மாதிரி நம்மளும் விளையாடனும்னு நினைச்சா அவன் ஒரு நல்ல பேட்ஸ்மேன்னு சொல்லாம். ஆனால் ஒரு டீமே ஒரு வீரரை பாத்து இன்ஸ்பயர் ஆகி அவர மாதிரியே ஒவ்வொரு விசயங்களும் அவர் வழில பின்பற்றினால் அவரை வரலாற்று தலைவன்னு சொல்லாம் . தோனி என்றுமே அந்த லிஸ்ட்ல தான் இருப்பார். என ரசிகர்கள் கூறுகின்றனர். உங்களுக்கும் இந்த இரண்டு போட்டிகளை பார்க்கும்பொழுது தோனியின் ஞாபகம் வந்திருந்தால் உங்களது கருத்துக்களை பதிவிடுங்கள். 


Advertisement