தல தோனியை பார்க்க 1,400 கிலோ மீட்டர் நடந்தே வந்த தோனியின் தீவிர ரசிகர்.! கடைசியில் என்ன நடந்தது தெரியுமா.?ms-dhoni-fan-by-balk-1400-km-for-meet-dhoni

தோனியின் தீவிர ரசிகர் ஒருவர் அவரைப் பார்ப்பதற்காக, சுமார் 1400 கி.மீட்டர் நடந்தே சென்றுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலக அளவில் அதிக ரசிகர்கள் கொண்ட வீரர்களின் பட்டியலில் தோனியும் ஒருவர். இவருக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டம் உலகம் முழுவதிலும் உண்டு. தோனி
இந்தியாவிற்கு 2007-ஆம் ஆண்டு T20 உலகக் கோப்பை, 2011-ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் 2013-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி என மூன்று ஐசிசி கோப்பைகளையும் வென்று கொடுத்துள்ளார்.

தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும், தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில், இவரைப் பார்ப்பதற்காக தோனியின் சொந்த ஊரடான ராஞ்சிக்கு அவருடைய ரசிகர் ஒருவர் நடந்தே சென்றுள்ளார்.

MS Dhoni

ஹிரியானாவை சேர்ந்த 18 வயதான அஜய் கில் என்ற தோனியின் தீவிர ரசிகர் தோனியை பார்க்க அவரது சொந்த ஊரான ஜலான் கெடா (Jalan Kheda) கிராமத்தில் துவங்கி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி வரை 1400 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்றுள்ளார். தோனி தற்போது ஐபிஎல் தொடரில் விளையாட ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ளார்.

இந்தநிலையில், தோனியை பார்க்க வேண்டுமென்று வந்த அவருக்கு தோனி ராஞ்சி திரும்ப மூன்று மாத காலம் ஆகும் என தகவல் கிடைத்துள்ளது. ஆனாலும் அதுவரை பொறுத்திருந்து அவரை பார்த்துவிட்டு தான் ஊர் திரும்புவேன் என முரண்டு பிடித்த அந்த பாசக்கார ரசிகருக்கு ராஞ்சி மக்கள் ஆறுதல் சொல்லி ஊர் திரும்ப விமான டிக்கெட் போட்டுக் கொடுத்துள்ளனராம்.