இந்தியா விளையாட்டு

"அவருக்கு முதல்வர் ஆகும் ஆசை இருக்கும் போல" கங்குலியை கடுமையாக விமர்சித்த பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர்!

Summary:

miandad critics indian former captain ganguly

புல்வாமாவில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பதற்றம் நிலவி வருகிறது. இந்த சூழலில் வரும் மே மாதம் துவங்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானுடனும் விளையாடக் கூடாது என இந்திய ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் சார்பாக பல்வேறு எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

வரும் மே மாதம் இறுதியில் இங்கிலாந்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் துவங்க இருக்கிறது. இந்த தொடரின் முதல் சுற்று ஆட்டத்தில் ஜூன் 16ஆம் தேதி இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. கிரிக்கெட் போட்டியை விட நாடுதான் முக்கியம் எனவே உலகக் கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடக் கூடாது என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

GANGULY AND MIANDAD க்கான பட முடிவு

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் அணியில் முன்னாள் வீரர் ஜாவித் மியான்தத் இந்திய கிரிக்கெட் வாரியத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். அதில், "இந்திய கிரிக்கெட் வாரியம் அளிக்கும் கொள்கைகளை நிச்சயம் பிசிசிஐ ஏற்காது என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது". மேலும் அவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியையும் கடுமையாக விமர்சித்துள்ளார். 

கங்குலியை பற்றி அவர் கூறுகையில், "கங்குலி வரும் தேர்தலில் போட்டியிட விரும்புகிறார் போல; அவருக்கு முதலமைச்சர் ஆகும் கனவு இருக்கும் என்று தோன்றுகிறது. எனவேதான் தேவையில்லாத கருத்துக்களை கூறி மக்கள் மத்தியில் பிரபலமடைய வேண்டும் என எண்ணுகிறார்" என்று மியான்தத் கூறியுள்ளார்.


Advertisement