நேற்று வேற லெவல் மேட்ச்..! ஒரே போட்டியில் 2 சூப்பர் ஓவர்! முட்டி மோதி கடைசியில் தெறிக்கவிட்ட பஞ்சாப் அணி!

நேற்று வேற லெவல் மேட்ச்..! ஒரே போட்டியில் 2 சூப்பர் ஓவர்! முட்டி மோதி கடைசியில் தெறிக்கவிட்ட பஞ்சாப் அணி!


mi-vs-kxip-two-super-over-in-one-match

மும்பை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடந்த நேற்றைய போட்டி சூப்பர் ஓவரை சென்று பஞ்சாப் அணி வெற்றிபெற்றது.

மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதிய நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 176 ரன்கள் குவித்தது. 16.3 ஓவர்களில் 116 ரன்களுக்கு 5 விக்கெட் என்ற நிலையில் மும்பை அணி இருந்தபோது அந்த அணி வீரர்கள் பொல்லார்ட் மற்றும் கோல்டர் நைல் இருவரும் அதிரடியாக ஆடி அணியின் எண்ணிக்கை 176 ஆக உயர்த்தினர்.

MI VS KXIP

இதனை அடுத்து 177 என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி வீரர்கள் சற்று அதிரடியாக ஆடினர். 51 பந்துகளில் 77 ரன்கள் எடுத்த KL ராகுல் 18வது ஓவரில் ஆட்டமிழந்தார். KL ராகுலை அடுத்து தீபக் ஹூடா, கிறிஸ் ஜோர்டான் இருவரும் பஞ்சாப் அணியை வெற்றியின் பாதைக்கு அழைத்துச்சென்றனர். இறுதியில் கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவை என்ற நிலையில் ட்ரென்ட் போல்ட் வீசிய கடைசி ஓவரில் பஞ்சாப் அணி 8 ரன்கள் மட்டுமே அடித்து போட்டியை சமன் செய்தது.

MI VS KXIP

இதனை அடுத்து சூப்பர் ஓவர் முறை கொண்டுவரப்பட்டு பஞ்சாப் அணி வீரர்கள் பூரன், ராகுல் முதலில் களமிறங்கினர். அதில் பூரன் டக்கவுட் ஆக, பஞ்சாப் அணி 6 பந்துகளில் 5 ரன்கள் மடுட்மே அடித்தது. இதனை அடுத்து களமிறங்கிய மும்பை அணி வீரர்கள் 6 பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே எடுத்ததால் ஆட்டம் மீண்டும் சூப்பர் ஓவர் முறைக்கு சென்றது.

இந்த முறை பஞ்சாப் அணி வீரர் கிறிஸ் ஜோர்டான் வீசிய பந்தில் மும்பை அணி வீரர்கள் 11 ரன்கள் அடித்தனர். பஞ்சாப் அணி 12 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் ட்ரென்ட் போல்ட் வீசிய சூப்பர் ஓவரில் கிறிஸ் கெயில் அதிரடி சிக்ஸ் அடிக்க பஞ்சாப் அணி 4 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.