காத்திருந்தது போதும்! கடைசி அறிவிப்பை வெளியிட்ட நடுவர்கள்; சோகத்தில் ரசிகர்கள்

காத்திருந்தது போதும்! கடைசி அறிவிப்பை வெளியிட்ட நடுவர்கள்; சோகத்தில் ரசிகர்கள்



match-abandoned-today-india-vs-newzland

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் இன்று நாட்டிங்காமில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுவதாக இருந்த 18 ஆவது ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.

இந்திய நேரப்படி 3 மணிக்கு துவங்குவதாக இருந்த ஆட்டம் மழையின் காரணமாக டாஸ் போடாமலே தள்ளிபோடப்பட்டது. அவ்வப்போது இடையில் மழை நின்றதால் ஆட்டம் துவங்கும் என்ற நம்பிக்கையில் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். 

wc2019

ஆனால் சரியாக 6 மணிக்கெல்லாம் நாட்டிங்காமில் அதிகமாக மழை பெய்யத் துவங்கியது. இன்று இதுவரை பெய்த மழையிலேயே  அப்போதுதான் கன மழை பெய்ய துவங்கியது. இதனால் இனிமேல் ஆட்டம் நடைபெறுமா என்பது கேள்விக்குறியாக இருந்தாலும் இந்திய நேரப்படி 8:45க்கு ஆட்டம் துவங்கினால் 20 ஓவர்கள் ஆட்டத்தினை நடத்த முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

டக் ஒர்த் லூயிஸ் விதி முறையின்படி ஒரு ஆட்டத்தில் முடிவினை தீர்மானிக்க இரு அணிகளும் குறைந்தது 20 ஓவர்கள் ஆடி இருக்க வேண்டும். ஆனால் இனிமேல் மழை நின்றாலும் மைதானத்தில் உள்ள ஈரப்பதம் குறைய வாய்ப்பில்லை என்பதால் ஆட்டத்தினை ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடுவதாக நடுவர்கள் அறிவித்துள்ளனர். இந்த உலகக்கோப்பை தொடரில் இதேபோன்று மழையால் கைவிடப்படும் நான்காவது போட்டி இதுவாகும்.

wc2019

அதனை தொடர்ந்து இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன. நியூசிலாந்து அணி 7 புள்ளிகளுடன் முதல் இடத்திலும் இந்திய அணி 5 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணியை பின்னுக்குத்தள்ளி மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. நான்கு போட்டிகளில் 3 போட்டிகளில் வென்றுள்ள ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இடத்தில் உள்ளது.