விளையாட்டு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து பிரபல வீரர் வெளியேற்றம்! இதான் காரணமா?

Summary:

Lunki negiti left from csk team ipl 2019

இந்தியன் பிரீமியர் லீக் 12வது சீசன் நாளை அதாவது மார்ச் 23ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. கடந்த வருடம் தோணி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடரை கைப்பற்றியது. கோப்பையை வென்ற சந்தோசத்துடன் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது சொந்த மண்ணில் களமிறங்கவுள்ளது.

சென்னையில் நாளை தொடங்கவுள்ள முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் நாளை மோதுகின்றன.

கடந்த வருடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சிறப்பாக செயல்பட்ட வேக பந்து வீச்சாளர் லுங்கி நிகிடி காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காயம் காரணாமாக இந்த IPL தொடர் முழுவதிலும் இருந்து நிகிடி விலகியுள்ளார். இதனால் சென்னை அணி பவுலிங்கில் வேறு யாரை களமிறக்கப்போகிறது என்று பொறுத்திருந்து தன் பார்க்கவேண்டும்.


Advertisement