விளையாட்டு

அடேங்கப்பா…. மைதானத்தை தாண்டி பக்கத்துக்கு மைதானத்துக்கு சென்ற பந்து.! உலகையே திரும்பி பார்க்கவைத்த வீரர்.! வைரல் வீடியோ

Summary:

பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது T20 போட்டியில் இங்கிலாந்து வீரர் லியம் லிவிங்ஸோடன் இமா

பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது T20 போட்டியில் இங்கிலாந்து வீரர் லியம் லிவிங்ஸோடன் இமாலய சிக்ஸர் அடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் மூன்று T20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது T20 போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது.

அந்த  போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி சிறப்பாக ஆடி 200 ரன்கள் எடுத்தது. பேட்டிங் செய்தபோது இங்கிலாந்து வீரர்  லியம் லிவிங்ஸோடன் இமாலய சிக்ஸர் ஒன்றை அடித்துள்ளார்.

லிவிங்ஸோடன் அடித்த ஒரு சிக்ஸர் மைதானத்தை தாண்டி வெளியில் சென்று, ரக்பி மைதானத்தில் சென்று விழுந்தது. லிவிங்ஸோடன் அடித்த இந்த சிக்ஸர் 122 மீட்டர் வரை சென்றுள்ளதாக கூறப்படுவதால், இதுவே கிரிக்கெட் வரலாற்றில் அடிக்கப்பட்ட மிகப்பெரிய சிக்ஸர் என்ற அளவிற்கு பேசப்பட்டு வருகிறது. இறுதியில் இப்போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. லிவிங்ஸோடன் சிக்ஸர் அடித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement--!>