ஐபில்: ஆட்டம் இழந்த விரக்தியில் மைதானத்திற்க்குள்ளையே கிரிஷ் கெய்ல் செய்த காரியம்! வைரலாகும் வீடியோ.

ஐபில்: ஆட்டம் இழந்த விரக்தியில் மைதானத்திற்க்குள்ளையே கிரிஷ் கெய்ல் செய்த காரியம்! வைரலாகும் வீடியோ.


kxip-batsman-chris-gayle-throws-away-his-bat-viral-vide

பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த நேற்றைய போட்டியின்போது பஞ்சாப் அணி வீரர் க்ரிஷ் கெய்ல் தான் ஆட்டம் இழந்த ஆத்திரத்தில் பேட்டை தூக்கி வீசிய காட்சி தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

ஐபில் 13 சீஸனின் 50 வது போட்டியில் நேற்று பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக பஞ்சாப் அணி வீரர் க்ரிஷ் கெய்ல் 63 பந்துகளில் 99 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார்.

ipl t20

இறுதி ஓவர் வரை விளையாடிக்கொண்டிருந்த க்ரிஷ் கெய்ல் 99 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ராஜஸ்தான் அணி வீரர் ஆர்ச்சர் வீசிய 19 வது ஓவர் 3 வது பந்தில் பந்து காலில் பட்டு பின் ஸ்டெம்பில் பட்டு போல்ட் ஆகி வெளியேறினார். சதம் அடிக்க 1 ரன்கள் மட்டுமே மீதம் இருந்த நிலையில் க்ரிஷ் கெய்ல் ஆட்டம் இழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தான் ஆட்டம் இழந்ததை தாங்கிக்கொள்ள முடியாத க்ரிஷ் கெய்ல் அடுத்த வினாடியே தனது கையில் இருந்த பேட்டை வேகமாக தூக்கி வீசி தனது கோபத்தை வெளிப்படுத்தினார். பின்னர் தன்னை போல்ட் செய்த ஆர்ச்சரிடம் வந்து அவரிடம் கைகொடுத்துவிட்டு அங்கிருந்து வெளியேறினார் க்ரிஷ் கெய்ல்.

இறுதியில் ராஜஸ்தான் அணி மிகவும் அதிரடியாக விளையாடி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

ஆட்டம் இழந்த விரக்தியில் க்ரிஷ் கெய்ல் மைதானத்திற்க்குள்ளையே படுவேகமாக பேட்டை தூக்கி வீசிய காட்சி தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.