இந்தியா விளையாட்டு

வார்த்தையே வரல..! நேற்றைய போட்டியின் இறுதியில் கண்ணீர்சிந்தி அழுத இந்திய வீரர்..! வைரல் வீடியோ..

Summary:

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாச

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி மிக சிறப்பாக விளையாடி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 317 ரன்கள் அடித்தது. இந்திய அணி சார்பாக தவான் 98 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். அணியின் கேப்டன் விராட்கோலி 56 ரன்களுக்கு ஆட்டம் இழக்க KL ராகுல் மற்றும் க்ருணால் பாண்டியா இருவரும் அதிரடியாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.

KL ராகுல் 62 ரன்களும், க்ருணால் பாண்டியா 58 ரன்களும் அடித்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இதனை அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 42 . 1 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்வியை தழுவியது.

இந்த போட்டியில் மிகவும் சிறப்பமான சம்பவம் என்வென்றால், தான் அறிமுகமான முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் அரைசதம் அடித்துள்ளார் க்ருணால் பாண்டியா. அதுவும் முதல் ஒரு நாள் போட்டியில், அதிவேகமாக அரை சதமடித்த (26 பந்துகள்) வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

இந்நிலையில் இந்திய அணியின் பேட்டிங் முடிந்த பிறகு க்ருணால் பாண்டியாவிடம் பேட்டி எடுக்க முயன்றபோது, அவரால் ஒருவார்த்தை கூட பேசமுடியவில்லை. கண்கலங்கியபடி சைகை மட்டுமே காட்டிய அவரது உணர்ச்சி வெளிபாடு தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.


Advertisement