கோலி: "அனுஷ்கா சர்மா இல்லாமல் வெளிநாட்டு போட்டியில் ஆடுவதா..!!" பிசிசிஐ-க்கு கோலி அதிரடி கோரிக்கை

கோலி: "அனுஷ்கா சர்மா இல்லாமல் வெளிநாட்டு போட்டியில் ஆடுவதா..!!" பிசிசிஐ-க்கு கோலி அதிரடி கோரிக்கை



kohli-requests-bcci-for-his-wife

கிரிக்கெட் வீரர்கள் வெளிநாடுகளில் நடக்கும் தொடர்களின் போது அவரது குடும்பத்தினரை அழைத்து செல்வது பற்றிய புதிய விதியை சமீபத்தில் பிசிசிஐ அறிவித்தது. இதில் வீரர்கள் தங்கள் மனைவி, குழந்தைகள் மற்றும் உதவியாளர்களை  இரண்டு வாரங்களுக்கு மேல் தங்களுடன் தங்கக் வைக்க கூடாது என அறிவித்தது. 

விராட் கோலி எப்போது வெளிநாட்டு கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்க சென்றாலும், அவர் மனைவி அனுஷ்கா சர்மாவும் உடன் செல்வார். இது சமீப காலங்களில் ஒரு சர்ச்சையாகவும் கிளம்பியது. 

kohli requests bcci for his wife

இந்த விதியானது கடந்த இங்கிலாந்து தொடரின்போது தான் பிசிசிஐ-ஆல் அறிவிக்கப்பட்டது. இந்த விதியானது இன்னும் ஒரு முழு வெளிநாட்டு தொடரில் கூட நடைமுறையில் பின்பற்றப்படவில்லை. அதற்குள்ளாகவே இதை விதியை மாற்ற வேண்டும் என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பிசிசிஐக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

அதில் அவர் வீரர்கள் தங்கள் மனைவியோடு வெளிநாட்டு தொடர்களுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். கோலியின் இந்த  கோரிக்கையை பிசிசிஐ உச்சநீதிமன்றம் அமைத்த நிர்வாக கமிட்டிக்கு அனுப்பியுள்ளது. அவர்கள் இப்போதைக்கு இதில் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள் என தெரிய வந்துள்ளது.

kohli requests bcci for his wife

இந்நிலையில் அனுஷ்கா சர்மா இல்லாமல் கோலி வெளிநாட்டு தொடர்களில் எப்படி விளையாடப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

விளையாட்டு வீரர்கள் முக்கிய போட்டிகளின் போது தங்கள் குடும்பத்தினரோடு இருக்கக் கூடாது என்ற விதி சில கிரிக்கெட் அணிகளிலும், கால்பந்து அணிகளிலும் நடைமுறையில் உள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.