நடிகை தர்ஷா குப்தா உட்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. காரணம் என்ன?
கேஎல் ராகுலை விடாமல் துரத்தும் சோதனைகள்.. டி20 தொடரிலும் பங்கேற்பது சந்தேகம்!
இந்திய கிரிக்கெட் அணியில் வளர்ந்து வரும் நட்சத்திரமாக இருந்து வருபவர் கே எல் ராகுல். ஐபிஎல் தொடரின்போது இவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அடுத்தடுத்து நடைபெற்ற தென்னாபிரிக்கா, அயர்லாந்து மற்றும் இங்கிலாந்திற்கு எதிரான தொடர்களில் இவரால் பங்கேற்க முடியவில்லை.
ஜெர்மனியில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட ராகுலின் உடல்நிலை தேரிய நிலையில் தற்போது பெங்களூருவில் உள்ள நேஷனல் கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். மேலும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்பதற்கான உடற்தகுதி சோதனையிலும் கலந்து கொள்ள திட்டமிட்டு இருந்தார்.

தான் பயிற்சி மேற்கொள்ளும் வீடியோக்களையும் அவ்வப்போது சமூக வலைதளத்தில் பகிர்ந்து வந்தார். நிச்சயம் இந்த தொடரில் அவர் பங்கேற்பார் என்று எதிர்பார்த்த நிலையில் மீண்டும் ஒரு சோதனை அவரை சூழ்ந்து கொண்டது.
கடந்த வியாழக்கிழமை கேஎல் ராகுலை பற்றி பேசிய பிசிசிஐயின் தலைவர் கங்குலி ராகுலுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து வரும் ஜூலை 29ஆம் தேதி துவங்க உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்பது சந்தேகம் என தெரியவந்துள்ளது.