"மோசமான அணுகுமுறை" சாம்சங் தொழிலாளர்கள் கைதுக்கு இயக்குனர் பா. ரஞ்சித் கண்டனம்..!
நேற்றைய ஆட்டத்தில் கைக்கு வந்த கேட்சை தவறவிட்ட கே.எல் ராகுல்.! கடுப்பான கவுதம் கம்பீர்.! வைரல் வீடியோ
2022ம் ஆண்டுக்கான ஐபிஎல்-லின் எலிமினேட்டர் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றுள்ளது. நேற்றைய ஆட்டத்தில் தோல்வி அடைந்ததால் லக்னோ அணி தொடரை விட்டு வெளியேறியது.
நேற்றைய போட்டியின்போது 2 ரன்களுடன் விளையாடி கொண்டிருந்த பெங்களூரு அணி வீரர் தினேஷ் கார்த்திக் மோஷின் கான் பந்துவீச்சை தூக்கி அடித்த பந்து லக்னோ கேப்டன் கே.எல் ராகுல் கையை நோக்கி சென்றது. ஆனால் அந்த பந்தை கையில் பிடித்து பின்பு தவறவிட்டார் கே.எல் ராகுல்.
— Yashi (@Smash_Jaiswal) May 25, 2022
இந்த கேட்சை அவர் பிடித்துவிடுவார் என நினைத்த பெவிலியனில் இருந்த அந்த அணியின் மெண்டார் கவுதம் கம்பீர் கைதட்டினார். ஆனால் ராகுல் கேட்சை விட்டதும் கம்பீர் ரியாக்ஷன் மாறியது. இதையடுத்து முகத்தை கோபமாக கைகளை வைத்து மூடி கொண்டார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்ட தினேஷ் கார்த்திக் 1 சிக்சர், 5 பவுண்டரி உட்பட 37 ரன்களை விளாசி அணியின் ஸ்கோர் உயர வழிவகுத்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.