விளையாட்டு

கிரிக்கெட் மைதானத்தில் மீண்டும் இப்படியொரு காட்சி கிடைக்குமா! ஆச்சர்யத்தில் ஆழ்த்திய இரு அணி கேப்டன்கள்

Summary:

Kholi and Williamson at border line

இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் ஆடவுள்ளது. இதில் டி20 தொடரின் கடைசி போட்டி இன்று நடைபெற்று வருகிறது. 

இந்த தொடரின் முதல் 3 போட்டிகளில் மட்டும் அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன் விளையாடினார். தொடர் தோல்வியால் தொடரை இழந்த வில்லியம்சன் அடுத்த 2 போட்டிகளிலும் களமிறங்கவில்லை. டிம் சௌதி கேப்டனாக செயல்படுகிறார். 

இந்திய அணியை பொறுத்தவரை முதல் 4 போட்டிகளில் கேப்டனாக இருந்த விராட் கோலி இன்றைய கடைசி போட்டியில் ஓய்வெடுத்துள்ளார். இன்றைய போட்டியில் இரு அணி கேப்டன்களும் பங்கேற்கவில்லை. 

இதனைத் தொடர்ந்து ஆட்டம் நடைபெற்று கொண்டிருக்கும் போது விராட் கோலி மற்றும் வில்லியம்சன் இருவரும் எல்லைக் கோட்டின் அருகே அமர்ந்து வெகுநேரமாக பேசிக் கொண்டிருந்தனர். அருகில் ரிஷப் பண்ட் அமர்ந்திருந்தார். தொடர் தோல்விகளை சந்தித்த போதிலும் இரு அணி கேப்டன்களும் இவ்வாறு அம்ர்ந்து பேசிய காட்சி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது. 


Advertisement