ஆட்டமா போட்டிங்க..! நான் அப்பவே சொன்னேனே கேட்டிங்களா.! இந்திய அணியை விளாசிய பீட்டர்சன்!

ஆட்டமா போட்டிங்க..! நான் அப்பவே சொன்னேனே கேட்டிங்களா.! இந்திய அணியை விளாசிய பீட்டர்சன்!


kevin-pitersen-talk-about-indian-team

இந்திய அணியை கிண்டல் செய்யும் விதமாக பீட்டர்சன் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 227- ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  

இதனால் ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் பலரும் விராட் கோலியின் கேப்டன்சிப்பை விளாசி வருகின்றனர். இந்த நிலையில், இந்திய அணியின் தோல்வியை கேலி செய்யும் வகையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பீட்டர்சன் டுவிட்டரில் பதிவை வெளியிட்டுள்ளார். 

அவரது ட்விட்டர் பக்கத்தில், ஆஸ்திரேலியாவை அந்த நாட்டில் தோற்கடித்தபோது நிறைய கொண்டாட வேண்டாம் என நான் எச்சரிக்கை விடுத்தது நினைவில் இருக்கிறதா என்று கிண்டல் செய்யும் விதமாக டுவிட் செய்துள்ளார்.