உலக்கோப்பை 2019: இந்திய அணியில் மீண்டும் இணைந்த முக்கிய வீரர்! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

Kedar jdhav joined with indian cricket tram world cup 2019


Kedar jdhav joined with indian cricket tram world cup 2019

ஐபில் சீசன் 12 முடிவடைந்ததை அடுத்து உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வரும் மே 30 முதல் தொடங்குகிறது. இங்கிலாந்தில் நடைபெற உலகக்கோப்பை போட்டிக்காக அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் இறங்கியுள்ளது. மேலும் அணைத்து அணிகளின் வீரர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டுவிட்டது.

இந்திய அணி:

இந்திய அணியை பொறுத்தவரை ஷிகர் தவான், ரோகித் ஷர்மா, கோலி, விஜய் ஷங்கர், தோனி, கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக், சாஹல், குல்தீப் யாதவ், முகமத் ஷமி, புவனேஷ்வர் குமார், பும்ரா ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.

Kedar jadhav

இந்த அணியானது வரும் 22 ஆம் தேதி இங்கிலாந்து புறப்படுகிறது. மேலும் 24 ஆம் தேதி நடைபெறவுள்ள பயிற்சி ஆட்டத்திலும் இந்திய அணி பங்கேற்கிறது. விராட்கோலி தலைமையில் இந்திய அணி உலகக்கோப்பையை நிச்சயம் வெல்லும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

கேதர் ஜாதவ் காயம்:

இந்த நிலையில் இந்திய அணியின் முக்கிய வீரராக கருதப்படும் கேதர் ஜாதவ் சென்னை அணிக்காக பஞ்சாப் அணியுடன் விளையாடும்போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதால்  உலகக்கோப்பை போட்டியில் விளையாடுவது கேள்விக்குறியானது. 

Kedar jadhav

இதனால் ஐபில் போட்டிகளில் இருந்து விலகி தீவிர சிகிச்சை மற்றும் ஓய்வு எடுத்துவந்த ஜாதவ் தற்போது குணமடைந்துவிட்டதாகவும், போட்டியில் விளையாட உடல் தகுதி பெற்றுவிட்டதாகவும் இதனால் ஜாதவ் இந்திய அணிக்காக உலகக்கோப்பை போட்டியில் விளையாடுவர் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது.