பூரன் அடித்த பந்து.. வேகமாக வந்து பவுலரின் மார்பில் பலமாக தாக்கி துடி துடித்த வீரர்.! ரசிகர்களை பதறவைத்த வீடியோ

பூரன் அடித்த பந்து.. வேகமாக வந்து பவுலரின் மார்பில் பலமாக தாக்கி துடி துடித்த வீரர்.! ரசிகர்களை பதறவைத்த வீடியோ


kaleel ahamad pain full video

2022 ஐபிஎல் தொடரின் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதியது. நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்தது.

இதனை தொடர்ந்து 208  ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிறகு 186 எடுத்தது. இதனால் டெல்லி அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி  பெற்றது.


நேற்றைய ஆட்டத்தின் 13வது ஓவரை டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது வீசினார். அப்போது பூரன் அடித்த பந்து அதிவேகத்தில் வந்து, கலீல் அகமது மார்பில் பலமாக தாக்கியது. இதனால் ஏற்பட்ட வலியால் அவர் அலறித் துடித்தார். இந்த சம்பவத்தால் மைதானத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.