விளையாட்டு

அவரா..? அதிரடி வீரரை அலேக்கா தூக்கி அணியில் சேர்த்த ஹைதராபாத்..!! முக்கிய வீரர் விலகியதால் நடந்த மாற்றம்..

Summary:

இங்கிலாந்து அணியின் அதிரடி வீரர் ஜேசன் ராய் ஹைதராபாத் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணியின் அதிரடி வீரர் ஜேசன் ராய் ஹைதராபாத் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஐபில் 2021 T20 போட்டிகள் வரும் 9 ஆம் தேதி தொடங்க உள்ளது. சென்னையில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் ஐபில் போட்டிகள் தொடங்க இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் அனைத்து வீரர்களும் தற்போதில் இருந்தே தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில் ஐபில் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தும் அணிகளில் ஒன்றான ஹைதராபாத் அணியில் இருந்து பிரபல ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் மிட்ஷெல் மார்ஷ் தனிப்பட்ட காரணங்களால் விலகியுள்ளார். இதனால் மிட்ஷெல் மார்ஷ்க்கு பதிலாக தற்போது ஹைத்ராபாத் அணி இங்கிலாந்து அணியின் அதிரடி வீரர் ஜேசன் ராய்யை 2 கோடி ரூபாய் அடிப்படை விலைக்கு வாங்கியுள்ளது.

நடந்து முடிந்த இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஜேசன் ராய் மிக சிறப்பாக விளையாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். டி20 போட்டியில் 132 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ள ஜேஸன் ராய், ஒருநாள் தொடரில் 123 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார்.

கடந்த ஆண்டு டெல்லி கேபிடல்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த ஜேஸன் ராய் ஏலத்தில் விடுவிக்கப்பட்டார். தற்போது அவர் நல்ல பார்மில் இருப்பது ஹைதராபாத் அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.


Advertisement