விளையாட்டு

600 விக்கெட்டுகள்.. டெஸ்ட் போட்டிகளில் முதலாவதாக சாதனை படைத்த ஆண்டர்சன்!

Summary:

James Anderson first fast bowler to get 600 wickets

இங்கிலாந்து மற்றும் பாக்கிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் பாக்கிஸ்தான் அணியின் கேப்டன் அசார் அலியின் விக்கெட்டை ஆண்டர்சன் வீழ்த்தினார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆண்டர்சனின் 600 ஆவது விக்கெட் இதுவாகும்.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக 600 விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தான். இவருக்கு அடுத்தபடியாக மெக்ராத் 563 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இங்கிலாந்து அணியின் பிராட் 514 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

சுழற்பந்துவீச்சில் யாரும் எட்ட முடியாத உயரத்தில் உள்ளார் முத்தையா முரளிதரன். டெஸ்ட் போட்டிகளில் இவர் 800 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அடுத்தடுத்த இடங்களில் வார்னே 708, கும்ப்ளே 619 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.

ஒட்டுமொத்த பந்துவீச்சாளர்களில் ஜேம்ஸ் ஆண்டர்சன் தற்போது 600 விக்கெட்டுகளுடன் 4 ஆவது இடத்தில் உள்ளார். 38 வயதான ஆண்டர்சன் 156 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.


Advertisement