ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வீரரை சதம் அடிக்கவிடாமல் தட்டி தூக்கிய ஜடேஜா.! போட்டியின் முழு விவரம்.!

ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வீரரை சதம் அடிக்கவிடாமல் தட்டி தூக்கிய ஜடேஜா.! போட்டியின் முழு விவரம்.!


jadeja got 3 wicket

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் போட்டி, T20 டெஸ்ட் தொடர் உள்ளிட்ட போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்தநிலையில், இரு அணிகளுக்கு இடையேயான 3வது  டெஸ்ட் போட்டி  சிட்னி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. நேற்றைய போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெய்ன் பேட்டிங்கை தேர்வு செய்தார். 

 இதனையடுத்து ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர்களாக வில் புகோவ்ஸ் மற்றும் டேவிட்  வார்னர் களமிறங்கினர். ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் டேவிட் வார்னர் 8 பந்துகளை சந்தித்து 5 ரன்கள் மட்டுமே எடுத்தநிலையில் முகமது சிராஜ் ஓவரில் புஜாராவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்துள்ளார். 

test cricketஇதனையடுத்து மழையால் ஆட்டம் பாதிப்படைந்தது.  இதனால் சிறிது நேரம் போட்டி ஒத்தி வைக்கப்பட்டது.மழை நின்று மீண்டும் போட்டி தொடர்ந்தது. அப்போது சைனி வீசிய பந்தில் புகோவ்ஸ்கி 110 பந்துகளுக்கு 62 ரன்கள் எடுத்தநிலையில், எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனையடுத்து முதல் நாள் ஆட்டநேர முடிவில் 55 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 166 ரன்களை ஆஸ்திரேலிய அணி எடுத்திருந்தது.

இந்தநிலையில், இன்று 2வது ஆட்டம் தொடங்கியது.  இதில், லபுஸ்சேன் 91 ரன்கள் எடுத்த நிலையில், ஜடேஜா பந்து வீச்சில் ரஹானேவிடம் கேட்ச் கொடுத்து சதம் எடுக்க தவறினார்.
இதனையடுத்து களமிறங்கிய வேட் 13 ரன்களும், கிரீன் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். அடுத்ததாக களமிறங்கிய டிம் பெய்ன் ஒரு ரன் எடுத்தநிலையில் வெளியேறினார். இதனையடுத்து களமிறங்கிய கம்மின்ஸ் ஜடேஜாவிடம் போல்ட் ஆகி வெளியேறினார். தற்போது ஸ்டீவன் ஸ்மித் 103 ரன்களுடனும், ஸ்டார்க் 15 ரன்களுடனும் ஆடிவருகின்றனர். தற்போது 100 ஓவர்கள் வீசப்பட்டநிலையில் 7 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா 299 ரன்களை எடுத்துள்ளது.