இவர்தான் இர்பான் பதான் மனைவியா?? போட்டோ இருந்தும் முகத்தை பார்க்க முடியலையே!! வைரலாகும் புகைப்படங்கள்!!

இவர்தான் இர்பான் பதான் மனைவியா?? போட்டோ இருந்தும் முகத்தை பார்க்க முடியலையே!! வைரலாகும் புகைப்படங்கள்!!


irfan-pathan-released-his-wife-photo-on-instagram

தனது மனைவியின் முகத்தினை மூடியபடி இர்பான் பதான் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் மிக சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவர் இர்பான் பதான். மிகசிறந்த பந்து வீச்சாளரான பதான் இந்திய அணிக்காக பல்வேறு வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளார். தற்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள பதான் போட்டி வர்ணனையாளராக உள்ளார்.

இந்நிலையில் பதான் சமீபத்தில் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்திருந்தார். ஆனால் அந்த அப்புகைப்படங்கள் அனைத்திலும் பதானின் மனைவி முகம் மறைக்கப்பட்டிருந்தது. ஒரு புகைப்படத்தில் கூட அவரது முகம் தெரியவில்லை.

Irfan pathanஇதனை பார்த்த நெட்டிசன்கள், சர்வதேச கிரிக்கெட் வீரராக இருக்கும் பதான் பிற்போக்கு சிந்தனை கொண்டவராக உள்ளார் என்ற கருத்துக்களை பதிவிவிட்டுவந்தனர். இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள பதான், மனைவியின் விருப்பப்படிதான், இன்ஸ்டாவில் அவரின் படம் மறைத்து வெளியிடப்பட்டது. நான் அவளுடைய துணைதான், அவளின் எஜமான் அல்ல என தெரிவித்துள்ளார்.

பதான் சவுதி அரேபியாவைச் சேர்ந்த  27 வயதான சபா பேக் என்பவரை கடந்த  2016ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இம்ரான்கான் பதான் என்ற மகன் உள்ளார்.

Irfan pathan

Irfan pathan

Irfan pathan