இந்தியா சினிமா விளையாட்டு

தமிழ் சினிமாவில் நடிகர் விக்ரமுடன் களமிறங்கும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்! குதூகலத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்!

Summary:

irfan bathan acting with vikram


இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர இடது கை வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் தமிழ் சினிமாவில் நடிகர் விகாரமுடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இந்த படத்திற்காக விக்ரம் ரசிகர்கள் மட்டுமின்றி கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

கடாரம் கொண்டான் படத்திற்கு பிறகு, இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்க உள்ளார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் முக்கிய அப்டேட்டை இன்று மாலை அறிவிக்க இருப்பதாக படக்குழு தெரிவித்திருந்தது. இந்தநிலையில் இந்தப் படத்தில் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் மற்றும் ஆல் ரவுண்டராக வலம் வந்த இர்ஃபான் பதான் இந்திய அணியில் முக்கிய வீரராக இருந்து பின்னர் ஓய்வு பெற்றார். இந்நிலையில் தற்போது தமிழ்சினிமாவில் நடிகராக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்திற்காக விக்ரம் ரசிகர்கள் மட்டுமின்றி கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


 


Advertisement