விளையாட்டு

அடேங்கப்பா!! ஐபில் அணி கேப்டன்களின் வயது வித்தியாசத்தை பாருங்க!! யார் அதிக வயதானவர்? யார் இளம் கேப்டன் தெரியுமா?

Summary:

ஐபில் போட்டிகள் நாளை மறுநாள் முதல் தொடங்க இருக்கும் நிலையில் மற்றொரு கிரிக்கெட் திருவிழாவை

ஐபில் போட்டிகள் நாளை மறுநாள் முதல் தொடங்க இருக்கும் நிலையில் மற்றொரு கிரிக்கெட் திருவிழாவை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

ஐபில் T20 சீசன் 14 வரும் 9 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. முதல் போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மும்பை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இரண்டாவது போட்டி டெல்லி மற்றும் சென்னை அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்தமுறை எப்படியும் கோப்பையை கைப்பற்றியே ஆகவேண்டும் என்ற முனைப்புடன் அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். அதேபோல் அணியின் கேப்டன்களும் தங்கள் அணியை வெற்றிபெற வைப்பதற்கான வியூகத்தை வகுத்து வருகின்றனர்.

அணியில் பல சீனியர் வீரர்கள் இருந்தும், டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு கேப்டன்களாக இளம் வீரர்கள் நியமிக்கப்பட்டிருப்பது ஐபில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும், எதிர்பார்ப்பையும் உருவாகியுள்ளது.

இந்நிலையில் இந்த ஐபில் போட்டியில் கேப்டன்களா செயல்படும் இளம் வீரர் மற்றும் வயதான வீரர் யார் என்பதை இங்கே பார்க்கலாம்.

தற்போது 39 வயதாகும் சென்னை அணியின் கேப்டன் தோனிதான் தற்போதுள்ள ஐபில் கேப்டன்களில் அதிக வயதானவர். இதற்கு அடுத்த படியாக ஹைதராபாத் அணியின் வார்னர் மற்றும் கொல்கத்தா அணியின் கேப்டன் இயான் மோர்கன் ஆகியோர்க்கு தற்போது 34 வயதாகிறது.

இதற்கு அடுத்த இடத்தில் 33 வயதாகும் மும்பை அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா உள்ளார். பெங்களூரு அணியின் கேப்டன் விராட்கோலி 32 வயதுடன் அடுத்த இடத்திலும், இதற்கு அடுத்ததாக பஞ்சாப் அணியின் கேப்டன் KL ராகுல் உள்ளார். இவருக்கு தற்போது வயது 28.

இந்த ஐபில் தொடரில் இளம் கேப்டன்களாக பார்க்கப்படுபவர்கள் சஞ்சு சாம்சன் மற்றும் ரிஷப் பண்ட். ராஜஸ்தான் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனுக்கு தற்போது 26 வயதாகிறது. தற்போது வெறும் 23 வயதே ஆகும் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் தற்போதைய ஐபில் கேப்டன்களில் மிக மிக வயது குறைவானவர் ஆவார்.


Advertisement