ஐபில்: புள்ளி பட்டியலில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்! எந்த அணி எந்த இடம்?
ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதுவரை 30 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் சென்னை அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இல்லது. நடப்பு சாம்பியனான சென்னை அணி இந்த சீசனிலும் ஆரம்பம் முதல் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இதுவரை நடந்த 8 போட்டிகளில் 7 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது சென்னை அணி.
புள்ளி பட்டியலில் 6 வது இடத்தில் இருந்த டெல்லி அணி கடைசியாக நடந்த இரண்டு போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றிபெற்றதை அடுத்து புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. சென்னை அணியுடன் தோற்றத்தை அடுத்து கொல்கத்தா அணி புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு சென்றுள்ளது.
மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் புள்ளி பட்டியலில் 5 மற்றும் 6 வது இடத்தில் உள்ளது. இதுவரை நடந்த போட்டிகளில் ஒரே போட்டியில் மட்டுமே வெற்றிபெற்றுள பெங்களூர் அணி புள்ளி பட்டியலில் 8 வது இடத்திலும், இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்றுள ராஜஸ்தான் அணி 7 வது இடத்திலும் உள்ளது.
புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடத்தில் இருக்கும் அணிகளே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால் அணிகள் இடையே கடுமையான போட்டி நிகழ்கிறது.