10 வருட ஐபில் சாதனையை முறியடித்த சென்னை அணி! என்ன சாதனை தெரியுமா?

10 வருட ஐபில் சாதனையை முறியடித்த சென்னை அணி! என்ன சாதனை தெரியுமா?


ipl-most-dot-balls-in-a-single-innings-deepak-chahar

ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. கோப்பையை வெல்லும் ஆர்வத்துடன் அணைத்து அணிகளும் சிறப்பாக விளையாடி வருகிறது. நடப்பு சாம்பியனான சென்னை அணியம் மிக சிறப்பாக விளையாடி வருகிறது. இதுவரை நடைபெற்ற 6 போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா அணியை எதிர்கொண்டது சென்னை அணி. சென்னையின் சொந்த மண்ணில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி சென்னை வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்னில் ஆட்டம் இழக்க 108 என்ற இலக்கை நிர்ணயித்தது கொல்கத்தா அணி.

chennai super kings

இந்த ஆட்டத்தில் சென்னை அணியின் சார்பாக பந்து வீசிய தீபக் சாகர் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது ஒரே ஆட்டத்தில் அதிக டாட் பால் வீசிய வீரர் என்ற சாதனையை புரிந்துள்ளார் தீபக் சாகர். நேற்றைய போட்டியில் தீபக் சாகர் 20 டாட் பால் வீசியுள்ளார். இதற்கு முன்னதாக ஆசிஷ் நெக்ரா ஒரே போட்டியில் 19 டாட் பால் வீசியதுதான் சாதனையாக இருந்தது.

இந்நிலையில் 10 வருடங்கள் கழித்து இந்த சாதனையை முறியடித்துள்ளார் தீபக் சாகர்.

chennai super kings