இயக்குனர் பாரதிராஜா மகன் தாஜ்மஹால் நாயகன் காலமானார்.! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!
ஐபில் 2019: அணிகளின் லேட்டஸ்ட் புள்ளி விவரம்! எந்த அணி எந்த இடம்? இதோ!

ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதுவரை 48 போட்டிகள் முடிவு பெற்றுள்ள நிலையில் டெல்லி அணி 12 போட்டிகளில் மொத்தம் 8 போட்டிகளில் வெற்றிபெற்று 16 புள்ளிகளுடன் முதல் இலத்திலும், அதே 16 புள்ளிகளுடன் நடப்பு சாம்பியனான சென்னை அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது.
ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணி தரவரிசையில் 14 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. கைதராபாத் அணி 12 புள்ளிகளுடன் நான்காம் இடத்தில் உள்ளது. ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடிவந்த கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் தலா 10 புள்ளிகளுடன் ஐந்து மற்றும் ஆறாம் இடத்தில் உள்ளது.
ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணி 10 புள்ளிகளுடன் 7 வது இடத்திலும், விராட்கோலி தலைமையிலான பெங்களூர் அணி 8 புள்ளிகளுடன் கடைசி இடமான 8 வது இடத்தில் உள்ளது.
புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடத்தில் இருக்கும் அணிகள் மட்டுமே அடுத்த சுற்றுக்கு தகுதிபெற முடியும் என்பதால் அணிகளிடையே கடுமையான போட்டி நிலவுகிறது. சென்னை மற்றும், டெல்லி அணி ஏறக்குறைய அடுத்த சுற்றுக்கு தகுதியாகிவிட்டது. அடுத்த இரண்டு இடத்திற்கு மும்பை, கைதராபாத், கொல்கத்தா, பஞ்சாப் அணிகளுக்கிடையே கடுமையான போட்டி நிலவுகிறது.