வங்காளக்கரை ஓரத்திலே.. ஐபிஎல் இறுதிப்போட்டிக்கான வரவேற்பை அதிகரிக்க மெரினா பீச்சில் கிளிக்ஸ்.!ipl-2024-final-kkr-vs-srh-clicks

 

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் நாளை இறுதிக்கட்டத்தை எட்டுகிறது. புள்ளிப்பட்டியலின்படி முதல் இடத்தில் இருந்து நேரடியாக இறுதிப்போட்டிக்கு தேர்வான கொல்கத்தா அணியும் - முதல் தகுதிச்சுற்றை தொடர்ந்து, இரண்டாவது தகுதி சுற்றில் வெற்றிபெற்று தேர்வான ஹைதராபாத் அணியும் மோதிக்கொள்கிறது. 

இறுதிக்கட்டத்தில் ஐபிஎல் 2024

நாளை மாலை 07:30 மணியளவில் நடைபெறும் இந்த ஆட்டம், சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. இதனால் ஐபிஎல் போட்டியை விளம்பரப்படுத்தும் இறுதிக்கட்ட பணியில் ஐபிஎல் நிர்வாகம் ஈடுபட்டு இருந்தது. 

இதையும் படிங்க: விராட் கோலியின் உயிருக்கு ஆபத்தா?.. கிரிக்கெட் மைதானத்தில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு.!!

அந்த வகையில், ஐபிஎல் இறுதிப்போட்டியில் விளையாடும் கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் - ஹைதராபாத் அணியின் கேப்டன் பெட் கம்மின்ஸ் ஆகியோர் சென்னை மெரினா கடற்கரையில் படகில் இருந்தவாறு எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

நட்சத்திர அணிகள் இல்லாத ஐபிஎல்

சென்னை, பெங்களூர், மும்பை உட்பட நட்சத்திர அணிகள் இல்லாத ஐபிஎல் 2024 இத்தொடரில் எந்த அணி வெற்றி பெறப்போகிறது என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது. ஆனால், நட்சத்திர அணியின் ரசிகர்கள் இறுதிக்கட்டத்தில் தங்களுக்கு பிடித்த அணிகள் இடம்பெறாத காரணத்தால், மைதானத்தை கண்டுகொள்ளவில்லை என்ற நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கோபத்துடன் மைதானங்களில் முகத்தை வைத்திருப்பது ஏன்? - மனம்திறந்த கெளதம் காம்பீர்.!