
IPL 2020 to Introduce Special Umpire to Monitor No-balls
ஐபில் கிரிக்கெட் போட்டிகளுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு. இந்நிலையில் அடுத்த ஆண்டு தொடங்க இருக்கும் ஐபில் போட்டிகளுக்கு இப்போதில் இருந்தே புது புது விதிகளை அறிமுகம் செய்துவருகிறது ஐபில் குழு. அந்த வகையில் பவர் பிளேயர் என்ற புது விதி ஒன்றை சமீபத்தில் ஐபில் கமிட்டி அறிவித்திருந்தது.
தற்போது நோ பந்துகளை கண்காணிக்க தனி நடுவரை நியமித்த உள்ளதாக ஐபில் கமிட்டி தெரிவித்துள்ளது. கடந்த வருடத்தில் மும்பை- பெங்களூர் அணிகளுக்கு இடையிலான போட்டியில் மலிங்கா வீசிய நோபால் பெங்களூர் அணியின் வெற்றியை தகர்த்தது.
அதேபோல, சென்னை அணி விளையாடும்போது இரு நடுவர்களும் நோ பால் குறித்து குழப்பனமா தீர்ப்பு வழங்கியதால் தோணி களத்தில் இறங்கி வாதிட்டது போன்ற பல சம்பவங்கள் நடைபெற்றது.
தற்போது இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் நோ பால்களை காவனித்து, அதற்கு தீர்ப்பு வழங்க தனி நடுவரை நியமிக்க உள்ளதாக ஐபில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement