ஐபிஎல் 2020: சென்னையில் போட்டிகள் எப்போது? சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் போட்டி அட்டவணை

ஐபிஎல் 2020: சென்னையில் போட்டிகள் எப்போது? சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் போட்டி அட்டவணை


Ipl 2020 matches at chennai

ஐபிஎல் 2020க்கான லீக் சுற்றின் முழு போட்டி அட்டவணை நேற்று இரவு வெளியானது. 8 அணிகள் 56 போட்டிகள் கொண்ட லீக் சுற்று மார்ச் 29 ஆம் தேதி துவங்கி மே 17 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 

இதன் முதல் போட்டியில் மும்பை மற்றும் சென்னை அணிகள் மோதுகின்றன. நீண்ட இடைவெளிக்கு பிறகு தோனியை மீண்டும் மைதானத்தில் பார்க்கும் ஆர்வத்தில் ரசிகர்கள் உள்ளனர். 

Ipl 2020

சென்னை அணிக்கான 14 லீக் போட்டிகளில் 7 போட்டிகள் சென்னையிலும் மீதமுள்ள 7 போட்டிகள் வேறு இடங்களிலும் நடைபெறுகிறது. மும்பைக்கு எதிரான முதல் போட்டி மும்பையில் நடக்கிறது. 

Ipl 2020

சென்னை அணி சென்னையில் முதலாவதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ஏப்ரல் 2ஆம் தேதி சந்திக்கிறது. லீக் சுற்றில் சென்னையில் கடைசியாக மே 10 ஆம் தேதி சென்னை அணி டெல்லியை எதிர்கொள்கிறது. மே 14 ஆம் தேதி கடைசி லீக் போட்டியில் பெங்களூரை எதிர்கொள்கிறது.