ஐபில் 2019 இல் மிக குறைந்த வயதுடைய வீரர் மற்றும் அவருடைய வயது என்ன தெரியுமா?

ஐபில் 2019 இல் மிக குறைந்த வயதுடைய வீரர் மற்றும் அவருடைய வயது என்ன தெரியுமா?


ipl-2019-youngest-player-name-and-age

ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 41 போட்டிகள் இதுவரை முடிந்துள்ள நிலையில் சென்னை அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்திலும், டெல்லி அணி இடண்டாவது இடத்திலும் உள்ளது. நேற்றைய ஆட்டத்தில் கைதராபாத் அணியை சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று புள்ளி பட்டியலில் மீண்டும் முதல் இடத்தை பிடித்தது.

இந்த ஐபில் சீசனை பொறுத்தவரை மிக குறைந்த வயதில் தேர்வான வீரர் என்றால் பிரேயஸ் ரே பர்மன். விராட்கோலி தலைமையிலான பெங்களூர் அணிக்காக சுமார் 1 . 5 கோடி ரூபாய்க்கு தேர்வு செய்யப்பட்டவர் பிரேயஸ் ரே பர்மன். 16 வயதேயான இவர்தான் இந்த சீசனில் தேர்வு செய்யப்பட்ட மிக குறைந்த வயதுடைய வீரராவார்.

IPL 2019

மனோஜ் திவாரி தலைமையிலான ராஞ்சி ட்ராபியில் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் ஒருவர் பிரேயஸ் ரே பர்மன். இந்திய அணியின் மிக சிறந்த சுழற்பந்து வீச்சாளரான அணில் கும்ப்ளே அளவிற்கு சிறப்பாக பந்து வீசக்கூடியவர் பிரேயஸ் ரே பர்மன்.