ஐபில் 2019; லேட்டஸ்ட் புள்ளி விவர பட்டியல்! எந்த அணி எந்த இடம்? இதோ!

ஐபில் 2019; லேட்டஸ்ட் புள்ளி விவர பட்டியல்! எந்த அணி எந்த இடம்? இதோ!


ipl-2019-latest-points-table

ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதுவரை 19 போட்டிகள் முடிவு பெற்றுள்ளது. அணைத்து அணிகளும் கோப்பையை வெல்ல தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை தோற்கடித்து சென்னை அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது.

இரண்டாவதாக நடைபெற்ற ஆட்டத்தில் கைதராபாத் அணி மும்பை அணியுடன் தோற்று புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் மும்பை அணி புள்ளி பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

IPL 2019

இதன்மூலம் முதல் நான்கு இடத்தில் இருந்த பஞ்சாப் அணி 5 வது இடத்திற்கு சென்றுள்ளது. கொல்கத்தா அணி மூன்றாவது இடத்தை தக்கவைத்துள்ளது. முதல் நான்கு இடத்தில் இருக்கும் அணிகள் மட்டுமே அடுத்த சுற்றிற்கு தகுதி பெரும் என்பதால் அணிகள் இடையே கடுமையான போட்டி நிகழ்கிறது.

டெல்லி, ராஜஸ்தான், பெங்களூர் அணிகள் அடுத்தடுத்து அதாவது 6 , 7 , 8 ஆகிய இடங்களில் உள்ளது. இதுவரை ஒரு ஆட்டத்தில் கூட வெற்றி பெறாத பெங்களூர் அணி அடுத்த சுற்றிற்கு முன்னேறுவது மிகவும் கடினம்.

IPL 2019