இந்தியா விளையாட்டு

கெத்து காட்டிய சிஎஸ்கே! ஐபிஎல் வரலாற்றில் தீபக் சாகர் புதிய சாதனை; என்ன தெரியுமா?

Summary:

ipl 2019 23rd leek - csk vs kkr - depak chakar new record

ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. 22 போட்டிகள் முடிவு பெற்ற நிலையில் 23 வது போட்டியானது சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் இடையே நேற்று சென்னையில் நடைபெற்றது. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது.

அதிரடி ஆட்டக்காரர்களுடன் களமிறங்கிய கொல்கத்தா அணியின் வீரர்கள் சொற்ப ரன்னில் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கொல்கத்தா அணியின் லின் மற்றும் ராணா இருவரும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தனர்.

https://cdn.tamilspark.com/media/18171ykg-pjimage-1554785305.jpg

கொல்கத்தா அணியின் நம்பிக்கை நட்சத்திரமான ரஸ்ஸலும் மற்ற அணிகளிடம் காட்டிய சூறாவளி ஆட்டத்தை சென்னை அணியிடம் காட்ட முடியவில்லை. எப்போதும் அதிரடியாக விளையாடும் ரஸ்ஸல் நேற்றைய ஆட்டத்தில் 44 பந்துகளில் 50 ஓட்டங்கள் மட்டுமே பெற்றார். ஆரம்பத்தில் இருந்து சொதப்பிய கொல்கத்தா அணி இறுதி ஓவரில் எடுத்த 15 ஓட்டங்கள் மூலம் அணியின் எண்ணிக்கை 108 ஆக உயர்ந்தது.

109 ரன்கள் எடுத்தார் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி, தனது ஆட்டத்தை நிதானமாக தொடங்கியது. முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 17.2 ஓவர்களில் 111 ரன்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சிஎஸ்கே வீரர் டுபிளசி அதிகபட்சமாக 43 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு பேருதவியாக இருந்தார். 

இப்போட்டியில் 4 ஓவர்கள் பவுலிங் செய்த் தீபக் சகார் 20 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார். தவிர, 20 டாட் பால்களை வீசி இருந்தார். இதன் மூலம் ஐபிஎல் அரங்கில் ஒரே இன்னிங்சில் அதிக டாட் பால் வீசிய பவுலர் என்ற சாதனை படைத்தார் சகார்.

ஐபிஎல்., அரங்கில் அதிக டாட் பால் வீசிய பவுலர்கள்: 
20 சகார் (சென்னை) எதிர்-கொல்கத்தா, சென்னை, 2019 
19 நெஹ்ரா (டெல்லி) எதிர்- பஞ்சாப், புளோயம்பாண்டென், 2009 
19 முனாப் படேல் (ராஜஸ்தான்) எதிர்- கொல்கத்தா, டர்பன், 2009  


Advertisement