இந்தியா விளையாட்டு

.1..666166646 இது ஒன்னும் மொபைல் நம்பர் இல்ல 'பேட்பாய்' ரஸ்ஸலின் பேட் மூலம் வந்த நம்பர்.!

Summary:

ipl 2019 - rcb vs kkr - andrew russel - 13 balls 48 runs

ஐபிஎல் சீசன் 12 தற்போது நடைபெற்று வருகிறது. 2019 ஐபிஎல் தொடரின் 17வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன்  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 
நேற்று மோதுயது. இதுவரை விளையாடிய அனைத்து போட்டிகளிலும் தோல்வி அடைந்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது பெங்களூர் அணி. 

இந்நிலையில் நேற்றைய போட்டி பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி, 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 205 ரன்கள் எடுத்தது. கடின இலக்கை துரத்திய கொல்கத்தா அணிக்கு, அசுர வேகத்தில் ரன்கள் சேர்த்த ஆண்டிரு ரசல், 13 பந்தில், 1 பவுண்டரி, 7 சிக்சர் என 48 ரன்கள் எடுத்தார்.

 

13 பந்தை எதிர்கொண்ட ரசல் அதில் 7 சிகச்ர்கள் விளாசி எட்ட முடியாது என நினைத்த ஸ்கோரை எட்டிப்பிடிக்க வைத்த ரசல், கொல்கத்தா ரசிகர்ளுக்கு ஸ்டாராக ஜொலித்தார். இதில் இவர் எதிர்கொண்ட 13 பந்தில், இரண்டு முறை ஹாட்ரி சிக்சர்கள் விளாசினார். மூன்று டாட் பந்துகளை எதிர்கொண்ட ரசல், .1..666166646 என அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றார். இது பார்க்க  மொபைல் நம்பர் போல இருப்பதாக சில ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர். 


Advertisement