துவக்க விக்கெட்டுகளை எளிதில் வீழ்த்தினாலும் கொல்கத்தாவின் வெற்றியை பறித்த ராஜஸ்தான் பவுலர்.!

துவக்க விக்கெட்டுகளை எளிதில் வீழ்த்தினாலும் கொல்கத்தாவின் வெற்றியை பறித்த ராஜஸ்தான் பவுலர்.!



ipl-2019---kkr-vs-rr---43rd-match---won-3wickets-rr

ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 42 போட்டிகள் இதுவரை முடிவுபெற்றுள்ள நிலையில் நடப்பு சாம்பியான சென்னை அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்திலும் டெல்லி அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது.

இந்நிலையில் கொல்கத்தாவில் நடைபெற்ற நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா அணியும், ராஜஸ்தான் அணியும் விளையாடிது. முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 175 ரன் எடுத்துள்ளது.

IPL 2019

கொல்கத்தா அணி சார்பாக அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடி 50 பந்துகளில் 97 ரன் எடுத்து அணியின் எணிக்கையை உயர்த்தினார். இதுவரை 179 ஐபில் போட்டிகளில் விளையாடியுள்ள தினேஷ் கார்த்திக் நேற்றைய ஆட்டத்தில் எடுத்த 97 ஓட்டம்தான் ஐபில் போட்டிகளில் அவர் எடுத்த அதிக பட்ச எண்ணிக்கையாக அமைந்தது.

எட்டக்கூடிய இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணிக்கு ரகானே (34), சாம்சன் (22) நிலைக்கவில்லை. அடுத்து வந்த கேப்டன் ஸ்மித் (2), ஸ்டோக்ஸ் (11) ஏமாற்றினர்.



 

பின் வந்த பின்னி (11), கோபால் (18) வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுபுறம் தொடர்ந்து போராடிய இளம் பராக் 47 ரன்கள் எடுத்த போது அவுட்டானார். கடைசி வரை போராடிய ஆர்ச்சர் 12 பந்துகளில் 27 ரன்கள் குவித்து ராஜஸ்தான் அணியை வெற்றி பெற வைத்தார்.

முடிவில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 19.2 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 177 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. துவக்க விக்கெட்டுகளை எளிதாக வீழ்த்தியதால் வெற்றி பெற்றுவிடலாம் என்ற கொல்கத்தா அணியின் கனவை தவிடுபொடியாக்கினர் ராஜஸ்தான் அணியின் பின்கள வீரர்கள்.