
ipl 2019 - 15 leek - csk vs mi - match win mi
ஐபிஎல் சீசன் 12 தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று மும்பையில் நடந்த போட்டியானது சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு 15 ஆவது லீக் போட்டியாக அமைந்தது. தொடர்ந்து மூன்று வெற்றிகளை பதிவு செய்த சென்னை அணி நேற்றைய போட்டியிலும் வெற்றி பெறும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
அதே வேளையில் மூன்று போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பதிவு செய்திருந்த மும்பை அணி வெற்றியை பெற வேண்டிய நெருக்கடிக்கு உள்ளானது. மேலும் போட்டியானது மும்பையில் நடைபெற்றதால் அந்த அணிக்கு கூடுதல் பலமாக அமைந்தது.
நேற்றைய போட்டியில் டாஸ் வின்செய்த கேப்டன் தோனி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதன்படி பந்துவீசிய சென்னை அணி துவக்கத்தில் சிறப்பாக பந்து வீசி மும்பை அணியின் துவக்க விக்கெட்டுகளை எளிதாக வீழ்த்தியது. இதனால் வெற்றி இலக்கு எளிதாக அமையும் என்று சென்னை ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.
18 ஓவர்கள் முடிவில் 125 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து மும்பை அணி ஆடிக்கொண்டிருந்தது. ஹர்திக் பாண்டியா மற்றும் பொல்லார்ட் இருவரும் பேட்டிங் செய்து கொண்டிருந்தனர். 19 ஆவது வரை சென்னை அணியின் சர்துல் தாக்கூர் வீசினார். அந்த ஓவரில் 2 சிக்சர்கள் உட்பட 16 ஓட்டங்கள் எடுக்கப்பட்டது.
20 வது ஓவரை பிராவோ வீசினார் அந்த ஓவரில் ஹர்திக் பாண்டியா வெளுத்து வாங்கினார். 3 சிக்சர்கள் ஒரு பவுண்டரி உட்பட மொத்தம் 29 ரன்களை அடித்தார். கடைசியாக வீசப்பட்ட 2 ஓவர்களில் மட்டும் 45 ரன்கள் அடித்தனர். இதனால் மும்பை அணி 170 ரன்களை குவித்தது. அதனால்தான் சென்னை அணிக்கு வெற்றி இலக்கு கடினமாக மாறியது. தோல்வியை தழுவ இதுவும் ஒரு முக்கிய காரணமாக அமைந்ததால் சென்னை ரசிகர்கள் பிராவோ, தாக்கூர் மீது செம கடுப்பானார்கள்.
Advertisement
Advertisement