இன்று மும்பை அணியை வீழ்த்த இதுதான் ஒரே வழி! இதை செய்தாலே போதும்! ஐடியா கொடுத்த முன்னாள் வீரர்

தனிப்பட்ட முறையில் வீரர்கள் இறங்கி அடித்தால் மட்டுமே மும்பை அணியை வெற்றிபெற முடியும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவரும் ஐபில் 13 வது சீசன் T20 போட்டிகள் முதல் சுற்றி முடிவடைந்து தற்போது பிளே ஆப் சுற்று தொடங்கியுள்ளது. இன்று நடைபெறும் பிளே ஆப் சுற்றின் முதல் போட்டியில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன.
புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் இந்த அணிகளில், இன்று வெற்றிபெறும் அணி நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெரும். இன்றைய போட்டியில் தோல்வியை சந்திக்கும் அணி அடுத்ததாக ஹைதராபாத் அல்லது பெங்களூரு அணியுடன் மோத வேண்டி இருக்கும்.
இந்த சீசனில் மிகவும் பலம்வாய்ந்த அணியாக மும்பை அணி உள்ளதால், இன்று மும்பை அணியுடன் மோதும் டெல்லி அணி வீரர்கள் தனிப்பட்ட முறையில் வீரர்கள் இறங்கி அடித்தால் மட்டுமே மும்பை அணியை வெற்றிபெற முடியும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து பேசிய அவர், டெல்லி அணியின் மிடில் ஆர்டர் சிறப்பாக இல்லை எனவும், இன்றைய போட்டியில் டெல்லி அணி தனது அணி வீரர்களின் திறமைகளை சரியாக பயன்படுத்தி வியூகம் அமைத்தால் மட்டுமே மும்பை அணியை வெற்றிபெற முடியும் என கூறியுள்ளார்.