தமிழகம் இந்தியா விளையாட்டு

பாக்கிஸ்தான் அணியை ஓடவிட்ட புதுக்கோட்டை தமிழன்! சொந்த ஊரில் தூக்கி கொண்டாடும் கிராம மக்கள்!

Summary:

Indian volleyball team captain

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள கோட்டைக்காடு என்ற கிராமத்தை சேர்ந்தவர் சா.ஜெரோம்வினித். இவர் பள்ளி பருவத்தில் இருந்தே கைப்பந்து போட்டியில் அதிகம் ஆர்வம் உள்ளவர்.

இந்தநிலையில் ஜெரோம் வினித் அவரது கடுமையான பயிற்சியாலும், சிறப்பான ஆட்டத்தாலும் கேரள அணியில் ஆடிவந்தார். அவரது அதிரடி ஆட்டத்தால், தெற்கு ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க இந்திய கையுந்துபந்து (volleyball)அணியில் கேப்டன் ஆக தேர்வு செய்ய பட்டார்.


இந்தநிலையில், நேபாளத்தில் நடைபெற்ற 13-வது தெற்கு ஆசிய விளையாட்டு போட்டியில், வாலிபால் ஆட்டத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஆடிய இறுதிப் போட்டியில், இந்திய அணி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது.

இந்திய வாலிபால் அணியின் தலைவராக ஆடிய, ஜெரோம் வினித் தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தாலுகா, கோட்டைக்காடு கிராமத்தைச் சேர்ந்த விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது, தமிழர்கள் அனைவருக்கும் பெருமை சேர்க்கக் கூடியதாகும்.

இதனைத்தொடர்ந்து தங்கத் தமிழர் ஜெரோம் வினித் அவர்களுக்கும், அவர் தலைமையில் ஆடிய இந்திய வாலிபால் அணியினருக்கும் வாழ்த்துக்கள் தெரிவிக்கும் வகையில் ஜெரோம் வினித் சொந்த ஊருக்கு திரும்பியபோது பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் ஜெரோம் வினித்தை பாராட்டும் வகையில் அவரை தூக்கி கொண்டாடி உள்ளனர். இந்த தகவலை பகிர்ந்து தங்க தமிழனுக்கு பாராட்டுகளை குவித்து பெருமையடையச் செய்வோம்.


Advertisement