நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! முக்கிய வீரர் இல்லாததால் ரசிகர்கள் ஏமாற்றம்!

நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! முக்கிய வீரர் இல்லாததால் ரசிகர்கள் ஏமாற்றம்!


indian team player


இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டி௨௦ போட்டி, மூன்று ஒரு நாள் மற்றும் இரண்டு டெஸ்டுகளில் விளையாட உள்ளது. இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதலாவதுடி௨௦ போட்டி வருகிற 24-ஆம் தேதி நடக்கிறது.


இந்தநிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி 20 தொடரில் விளையாடப்போகும் இந்திய அணி வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது பிசிசிஐ. தொடர்ந்து அணியில் புறக்கணிக்கப்பட்ட தோனி, இந்தமுறையும் அணியில் சேர்க்கப்படவில்லை.

MS Dhoni

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு  விளையாடும் போட்டிகளில் தல தோனி இல்லாததால் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. 

முதலில் டி 20 தொடர் நடைபெற உள்ளது. இதற்காக விராட் கோலி தலைமையில் இந்திய அணி வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது பிசிசிஐ

விராட் கோலி(அணித்தலைவர்), ரோகித் சர்மா (துணைத்தலைவர்), கே.எல் ராகுல், ஷிகர் தவான், ஸ்ரேயால் அய்யர், மனீஷ் பாண்டே, ரிஷப் பாண்ட் (கீப்பர்), ஷிவம் தூப், குல்தீப் யாதவ், சஹால், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, நவ்தீப் சைனி, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தகூர்.